
Ajith order to Beat Vijay film :
இப்படத்தின் தமிழக உரிமம் தளபதி 63 படத்தை விட அதிகமாக இருக்கவேண்டும் என அஜித் உத்தரவிட்டாராம். இதனால் இப்படத்தை அதிகமாக விற்க போனி கபூர் டீல் பேசி வருகிறாராம்.
விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.
முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட இறைவி நடிகை – புகைப்படங்கள் இதோ.!
ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் ஆக இந்த ட்ரைலர் வெளியானது போல் படமும் சர்ப்ரைசாக முன்கூட்டியே வெளியாக உள்ளதாம்.
அதாவது முன்னதாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட இப்படம் தற்போது ஜூலை 25ம் தேதி அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் வியாபாரம் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தமிழக உரிமம் தளபதி 63 படத்தை விட அதிகமாக இருக்கவேண்டும்.
என அஜித் உத்தரவிட்டாராம். இதனால் இப்படத்தை அதிகமாக விற்க போனி கபூர் டீல் பேசி வருகிறாராம்.