Ajith New Movie Update
Ajith New Movie Update

பிரபல இயக்குனர் ஒருவர் தல அஜித்தை சந்தித்து கதை கூறியதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Ajith New Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று படத்தின் மூலம் இயக்குனரான இவர் தற்போது சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதனையடுத்து சுதா கொங்கரா விஜயை வைத்து தளபதி 65 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சுதாவின் கதையில் திருப்தி இல்லாததால் விஜய் இந்த படத்தை நிராகரித்து விட்டதாகவும் கூறப்பட்டது.

தலையை இயக்க தயங்கிய வினோத், ஒரே வார்த்தையில் ஆப் செய்த அஜித்.!

அதன் பின்னர் அஜித் சுதா கொங்கராவை கதை கூற வருமாறு அழைத்து இருந்ததாகவும் தகவல்கள் வெளிவர தொடங்கின.

இந்த நிலையில் சுதா அஜித்தை சந்தித்து கதை கூறியதாக தகவல் ஒன்று வைரல் ஆனது. அது உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதன் பிறகு தான் சுதா கொங்கரா அஜித்தை சந்தித்து கதை கூறுவார் எனவும் அதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.