வலிமை படத்தில் தல அஜித்தின் பெயர் என்ன என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Ajith Name in Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். படத்தில் தல அஜித் ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடிக்கிறார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார்.

வலிமை படத்தில் தல அஜித்தின் பெயர் என்ன தெரியுமா? செம மாஸான பெயரை தேர்ந்தெடுத்த எச் வினோத்.!!

தற்போது தல அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தல அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற பெயரில் இப்படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ரசிகர்கள் தல அஜித்திற்கு மாஸான பெயரை எச் வினோத் தேர்ந்தெடுத்து இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.