அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் மதுரையை போஸ்டர் ஒன்று அதிர வைத்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித், தனக்கும் அரசியலுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை ஒட்டு போடுவது மட்டுமே என்னுடைய கடமை என உறுதியாக இருந்து வருகிறார்.
இவரை பலர் அரசியலுக்கு அழைத்தும் தன்னுடைய கொள்கையில் உறுதியாக உள்ளார். சமீபத்தில் பா.ஜ.க இவரின் பெயரை வைத்து ஆதாயம் தேட முயன்ற போதும் அறிக்கை ஒன்றின் மூலமாக அதனை சுக்குநூறாக்கினார்.
இந்நிலையில் தற்போது மதுரையில் அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் இப்படியொரு கட்சி உதயமாகி இருக்கிறதா? அல்லது ரசிகர்கள் பார்த்த வேலையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.