Ajith Movies Telecast in TV Channel
Ajith Movies Telecast in TV Channel

வாரத்திற்கு நான்கு விஜய் படத்தை ஒளிபரப்பும் சேனல் ஒன்று 20 வருடங்களுக்கு மேலாக அஜித் படத்தையே ஒளிபரப்பாமல் இருந்து வருகிறது.

Ajith Movies Telecast in TV Channel : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்களுடைய திரைப்படங்களுக்கு எப்போதும் மவுசு அதிகம்.

தியேட்டர்களிலும் சரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போதும் சரி இரண்டிலும் எவ்வளவு சாதனைகளை படைக்கிறது என்பதை ரசிகர்கள் உற்று நோக்குவார்கள்.

இதற்காகவே டிவி சேனல்களில் அஜித் விஜய் படங்களை போட்டி போட்டு வாங்கி ஒளிபரப்பி தங்களது டிஆர்பி களை அதிகப் படுத்திக் கொள்வார்கள்.

ஆனால் தொலைக்காட்சி தொடங்கியது பல வருடங்கள் ஆகியும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக அஜித்தின் படத்தையே ஒளிபரப்பாத சேனல் ஒன்று உள்ளது.

அது ஸ்டார் விஜய் தான். இந்த சேனலில் வாரத்திற்கு நான்கு விஜய் படங்கள் ஒளிபரப்பாகின்றன. ஆனால் இதுவரை அஜித் படங்கள் ஒன்று கூட ஒளிபரப்பானது இல்லை.

நடிகர் கார்த்தியின் திருமணத்தில் கலக்கலான லுக்கில் தளபதி விஜய் – திடீரென வைரலான வீடியோ!

இதற்கு காரணம் தல அஜித் படங்களின் சாட்டிலைட் உரிமை ஒன்று கூட விஜய் டிவி கைப்பற்றியது இல்லை. பெரும்பாலும் அஜித் படங்களை சன் டிவி, ஜீ தமிழ் போன்ற நிறுவனங்களே கைப்பற்றுகின்றன.

அதிலும் குறிப்பாக படத்தின் பூஜை தொடங்கும் போதே சன் டிவி நிறுவனம் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கி விடுவது மட்டும் சேனல்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.

விஜய் டிவி சில குறிப்பிட்ட படங்களை மட்டுமே வாங்கியுள்ளதாலே மீண்டும் மீண்டும் அதே திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறது.

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் சாட்டிலைட் மூலம் விஜய் டிவி இடம் இருந்தாலும் ஜீ தமிழ் நிறுவனம் அதனை விலைக்கு வாங்கி ஒளிபரப்பி இருந்தது. இதனால் விஜய் டிவியால் நேர்கொண்டபார்வை படத்தையும் ஒளிபரப்ப முடியாமல் போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.