Ajith Movie Actress Abirami
அஜித்தை மறக்க முடியாது எனவும் ஐ லவ் யூ விஜய் என கூறியும் பிக் பாஸ் வீட்டை அமர்களப்படுத்தியுள்ளர் ஆபிராமி.

Ajith Movie Actress : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் அபிராமி.

நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவர் நேற்று பிக் பாஸ் வீட்டில் விஜயின் பாடலை ஒளிபரப்பிய போது நடனமாடி விட்டு பின்னர் ஐ லவ் விஜய் என உரக்க கத்தினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான் – ஏன் தெரியுமா?

அதன் பின்னர் மாலையில் ஒரு டாஸ்கில் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எது என கேட்டதற்கு அஜித்துடன் நேர்கொண்ட பார்வையில் நடித்தது மறக்க முடியாது என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் அஜித், விஜய் என இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் அபிராமி ட்ரெண்டாகியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.