Ajith Lawrence Sentiment

Ajith Lawrence Sentiment : காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்தது.

வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.

முதல் வாரத்திற்குள்ளாகவே 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் கூடிய விரைவில் நூறு கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துடன் மோதும் ஜீவா – எப்படி இந்த தில் வந்தது?

இந்நிலையில் இந்த வெற்றியையும் அஜித்தையும் இணைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முனி சீரிஸ் எப்போதெல்லாம் வெளியாகிறதோ அதே ஆண்டில் தல அஜித்தும் ஒரு பிளாக் பஸ்டர் படத்தை கொடுப்பாராம்.

2007-ம் ஆண்டு முனி முதல் பாகம் வெளியானபோது அஜித் பில்லா எனும் மெகா பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்தார்.

அதேபோல் 2011-ம் ஆண்டு முனி இரண்டாம் பாகம் காஞ்சனா வெளியாகும்போது அஜித் மங்காத்தா எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார்.

2015-ம் ஆண்டு காஞ்சனா இரண்டாம் பாகம் வெளியானபோது அஜித் வேதாளம் எனும் வெற்றி படத்தை கொடுத்தார். தற்போது இந்த ஆண்டும் காஞ்சனா மூன்றாம் பாகமும் அஜித்தின் விஸ்வாசமும் படு ஜோராக வெற்றிபெற்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.