நடிகர் அஜித் தனது நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா மேற்கொண்டு இருக்கிறார். அவரது சிறிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை வட்டாரத்தில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் தற்பொழுது இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK61 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தனக்கான படப்பிடிப்பு பணிகளை முடித்த பிறகு ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தனது நண்பர்களுடன் இணைந்து பைக்கில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தில் நடிகர் அஜித்குமார் உடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் சென்று இருக்கிறார்.

இவர்களது இந்த சுற்றுலாவின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே வைரலாகி வருவதை தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார் ஜம்மு காஷ்மீருக்கு பைக்கில் தனது குழுவுடன் சென்றிருக்கிறார். முதலில் அங்குள்ள புத்தர் கோவிலில் வழிபாடு செய்து முடித்த அஜித் தற்பொழுது தங்களது தங்கும் விடுதியில் திறந்தவெளி உணவகத்தில் தனது நண்பர்களுடன் உற்சாகமாக உணவருந்தும் சிறிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதனை அஜித் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.