தல அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் கடைசியாக வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படம் 300 கோடி வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வைரலானது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படம் தொடர்பான அதிகாரவபூர்வமான தகவல்களுக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தல அஜித் குமாரின் லேட்டஸ்ட்டான புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் BMW ஆபீஸ் சென்று இருந்த தல அஜித் குமார் அவர்கள் அங்குள்ள பணியாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.