Ajith is bike racer in Thala 60 : H.Vinoth | Boney kapoor | Thala Ajith | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Ajith is bike racer in Thala 60 :

இப்படத்தில் அஜித் பைக் ரேஸராகவும் நடிக்கிறார். அவருடைய நிஜ திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தில் நிறைய பைக் சேஸிங் காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

பேட்மிட்டன் வீராங்கனையுடன் காதல்? – வெளிப்படையாக சொன்ன விஷ்ணு விஷால்!

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் அஜித் போலிஸாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லி இருந்தோம் ஆனால் அது மட்டும் இல்லையாம் இப்படத்தில் அஜித் பைக் ரேஸராகவும் நடிக்கிறார்.

அவருடைய நிஜ திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தில் நிறைய பைக் சேஸிங் காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

மேலும் இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் மிகவும் பிரமாண்டமாக தயாராக உள்ளதாம். இன்னும் சொல்லப்போனால் ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் மிகவும் ஸ்டைலிஷாக இப்படம் தயாராக உள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.