Ajith in Valimai Movie Update

வலிமை படம் பற்றிய மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Ajith in Valimai Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்திற்கு அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

அஜித் போலீஸ் வேடத்தில் நடிப்பதால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படக்குழுவின் அதிரடியான பிளான்.. மாஸ்டர் மற்றும் வலிமை படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?? – இதோ விவரம்

தற்போது படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தல அஜித் இந்த படத்திற்காக ஊரடங்கிலும் கடுமையாக ரிஸ்க் எடுத்து வருகிறார்.

வலிமை படத்திற்காக தன்னுடைய உடலமப்பை கட்டுமஸ்தாக மாற்றி வருகிறார். படம் முழுவதும் சிக்ஸ்பேக் வைத்து மிரட்ட உள்ளார்.

தன்னுடைய வீட்டிலேயே ஜிம் வைத்துள்ள அஜித் இதற்காக ஒரு ட்ரெய்லரை வைத்து காலை மாலை என இரண்டு வேளையும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இதனால் வலிமை படம் அஜித் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் முழுவதும் சிக்ஸ் பேக்குடன் அஜித் படம் வரப் போவதால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இதுவரை இல்லாத அளவு செம மாஸாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.