அஜித் தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்காக ரூட்டை மாற்ற முடிவு செய்துள்ளார்.

Ajith in Upcoming Movies Director Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

ரூட்டை மாற்றிய அஜித்.. அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்க போவது யார் யார்? ஒரே நேரத்தில் லீக்கான சூப்பர் அப்டேட்ஸ்.!!

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என சொல்லப்பட்டு வருகிறது.

அதற்கு அடுத்ததாக அஜித்குமார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

ரூட்டை மாற்றிய அஜித்.. அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்க போவது யார் யார்? ஒரே நேரத்தில் லீக்கான சூப்பர் அப்டேட்ஸ்.!!

இப்படி அடுத்தடுத்து அஜித் படங்களில் அப்டேட் வெளியாகி வருவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதுவரை கார்ப்பரேட் நிறுவனங்கள் பக்கமே செல்லாத அஜித் தன்னுடைய அடுத்த படத்தின் மூலம் லைக்கா நிறுவனத்துடன் கை கோர்க்கிறார். அதற்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைய இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.