சிம்புவின் வரை கொண்டாட்டத்தில் திரிஷாவுடன் தல அஜித் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Ajith in Simbu Birthday Party : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. மக்கள் தல அஜித்துக்கு ரசிகர்கள் ஆக இருப்பது போல திரையுலக பிரபலங்கள் பலரும் தல அஜித்தின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

சிம்புவின் பர்த்டே கொண்டாட்டத்தில் திரிஷாவுடன் தல அஜித் - இணையத்தில் வைரலாகும் கியூட் போட்டோ

அவர்களில் ஒருவர்தான் நடிகர் சிம்பு. லிட்டில் சூப்பர் ஸ்டாராக திரையுலகில் ஜொலிக்க தொடங்கிய சிம்பு ஆரம்ப கால படங்களில் தல அஜித்தின் ரெபரன்ஸை படங்களில் வைத்தார். அஜித் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட ஒரு நடிகர்.

தல அஜித்திற்கு சிம்பு என்றால் மிகவும் பிடிக்கும் என்பதினால் சிம்புவின் பர்த்டே கொண்டாட்டத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார். அஜித் மட்டுமல்லாமல் நடிகை திரிஷா இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சமூக வைரலாகி வருகிறது. சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தல அஜித் செம சூப்பரான லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.