Ajith in Next 4 Movies
Ajith in Next 4 Movies

தல அஜித் அடுத்தடுத்து யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்? அவரின் அடுத்த நான்கு படங்களின் இயக்குனர் யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajith in Next 4 Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்தப் படத்தை இயக்குனர் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்கிறார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இப்படம் இருந்து வருகிறது.

அவசர அவசரமாக அஜித் மருத்துவமனைக்கு சென்றதற்கான காரணம் இதுதானா?? வெளியான தகவல்!

இதுவரை 50 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே முடிவடைந்து இருப்பதால் தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் பொங்கலுக்கு தள்ளி போய் உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து உருவாக உள்ள அஜித்தின் நான்கு திரைப்படங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர்கள் மீது வடிவேலு போலீசில் புகார் – திரையுலகில் பரபரப்பு!

1. வலிமை
2. விஷ்ணுவர்தனுடன் ஒரு படம் ( ஆரம்பம் 2-வாக இருக்கலாம் )
3. வெங்கட் பிரபுவுடன் ஒரு படம் (மங்காத்தா 2-வாக இருக்கலாம் )
4. சிறுத்தை சிவாவுடன் ஒரு படம்.

எது எப்படி இருந்தாலும் அஜித்தின் இந்த நான்கு படங்கள் தல ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.