அஜித்தின் புதிய படத்துக்கான கெட்டப் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith in New Getup Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அஜித்தின் அடுத்த பட கெட்டப் இது தானா? இணையத்தைக் கலக்கும் புகைப்படம்

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில்தான் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டு வருகிறது.

அஜித்தின் அடுத்த பட கெட்டப் இது தானா? இணையத்தைக் கலக்கும் புகைப்படம்

இப்படியான நிலையில் அஜித் குமார் போனி கபூரை அவருடைய அலுவலகத்தில் சென்று சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக இதனைப் பார்த்த ரசிகர்கள் இதுதான் புதிய படத்துக்கான அஜித்தின் கெட்டப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.