NKP

NKP Update : விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச்.

வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அஜித் சொன்ன ஒரு வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது: உருகிய இசையமைப்பாளர்

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை நடிகர் அஜித் முடித்துவிட்டார்.

நேற்று இதன் படப்பிடிப்பை முடித்த அஜித், சென்னை திரும்பியிருப்பதாகவும் கூடிய விரைவில் இதன் பின் தயாரிப்பு பணிகள் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித் ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.