ஸ்கூல் குரூப் போட்டோவில் சுட்டித்தனத்தை அவிழ்த்து விட்டு உள்ளார் அஜித்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் 61-வது திரைப்படம் உருவாகி வருகிறது.

ஸ்கூல் குரூப் போட்டோவில் சுட்டித்தனத்தை அவிழ்த்து விட்ட அஜித்.. அப்போவே எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் அஜித் ரெட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். அஜித் திறமையான நடிகர் என்பதை தாண்டி சுட்டித்தனமானவர் என்பது பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

குறிப்பாக மங்காத்தா படத்தின் வெற்றி விழாவில் அஜித் அர்ஜுனுடன் சேர்ந்து செய்த கலாட்டா வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருப்பது நினைவு இருக்கலாம். சிறுவயதிலும் அஜித் இப்படி சுட்டித்தனமாகத்தான் இருந்துள்ளார் என்பது இன்னொரு புகைப்படத்தின் மூலம் உறுதியாகி உள்ளது.

ஸ்கூல் குரூப் போட்டோவில் சுட்டித்தனத்தை அவிழ்த்து விட்ட அஜித்.. அப்போவே எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க

அதாவது ஸ்கூல் படிக்கும்போது குரூப் போட்டோ எடுக்கும்போது அஜித் சுட்டித்தனமான வேலை செய்து போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.