Ajith in Bollywood Movie
Ajith in Bollywood Movie

இந்தி படத்தில் தல அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajith in Bollywood Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டு இந்த நிலையில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த வருடத்திற்கு தள்ளி போய் உள்ளது.

மேலும் இப்படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் அஜித்தின் நடிப்பில் எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் வெளியான வாலி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளார்.

போனி கபூரின் அடுத்த தமிழ் இயக்குனர், ஹீரோ இவர் தான் – அப்போ அஜித் இல்லையா? வெளியான பரபரப்பு தகவல்.!

அதுமட்டுமல்லாமல் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்து மிரட்டி இருந்த வரலாறு படத்தின் ரீமேக் உரிமையையும் கைப்பற்றியுள்ளார்.

தன்னுடைய மகன் அர்ஜுன் கபூரை வைத்து வாலி படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படத்தின் இரண்டு வேடங்களில் ஒரு வேடத்தில் அஜித்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

போனி கபூரின் கோரிக்கையை ஏற்று அஜித்தும் இப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடித்தால் நிச்சயம் பாலிவுட் சினிமாவிலும் அஜித்தின் புகழை அவரது ரசிகர்கள் தெறிக்க விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.