வலிமை இப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு இந்தியா திரும்புவதற்கு முன்னர் தல அஜித் பைக் ரஷ்யாவில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றியுள்ளார்.

Ajith in Bike Ride in Russia : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகர் மட்டுமல்லாமல் பைக் ரைடர், பைலட், கார் ரேஸர் என பல திறமைகளைக் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ரஷ்யாவில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கில் சுற்றி பார்த்த அஜித் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்தினை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்கி வருகிறார்.

முதல் முறையாக கிரிக்கெட் சாதனை : நியூசிலாந்தை, வங்காளதேசம் வீழ்த்தியது எப்படி?

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தில் கடைசி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து சமீபத்தில் படக்குழு சென்னை திரும்பியது.

“Vishal 32” படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்! – வைரலாகும் வீடியோ | Vishal, Sunaina | HD

ஆனால் தல அஜித் இந்தியா திரும்புவதற்கு முன்பாக ரஷ்யாவில் பைக்கில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றிப் பார்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளை குடித்து வருகின்றன.