Ajith Idea for Valimai Story

அஜித் கொடுத்த ஐடியாவை வலிமை திரைப்படத்தின் கதையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajith Idea for Valimai Story : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

போனி கபூர் தயாரிக்க இந்த படத்தை வினோத் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் தற்போது இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரானா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. வில்லனாக நடிக்க உள்ள கார்த்திகேயா இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் தல அஜித் விசுவாசம் படத்தில் பெண்களை கவர்வது போல சென்டிமென்ட் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதேபோல் இந்த ஆக்சன் படத்திலும் ஒரு சில சென்டிமெண்ட் காட்சிகள் சேர்க்கலாமே என இயக்குனர் வினோத்துக்கு ஐடியா கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக வலிமை படத்தின் கதையில் பெண்களை கவரும் சென்டிமென்ட் காட்சிகள் சேர்த்து சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.