Ajith Helps to Gym Trainer

அம்மாவின் நகை அடகு வைத்து ஜிம் டிரைனர் இதனை அறிந்த அஜித் அவருக்கு ஐந்து லட்சத்தை அள்ளிக் கொடுத்து உதவியுள்ளார்.

Ajith Helps to Gym Trainer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். நடிப்பது மட்டுமே என் வேலை நடிப்பதோடு என்னுடைய வேலை முடிந்துவிட்டது என எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தனித்து வாழ்ந்து வருபவர் தல அஜித்.

இருப்பினும் வறுமையில் வாடும் மக்களுக்காக தான் செய்யும் உதவி வெளியே தெரியாமல் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவரால் பயனடைந்தவர்கள் வெளியே சொன்னால் தான் அவர் செய்த உதவி குறித்து அனைவருக்கும் தெரிய வருகிறது.

தன்னுடைய ஜிம் டிரைனர் ஒருவர் அம்மாவின் நகையை அடகு வைத்து வீடு கட்டியுள்ளார். இதனை அறிந்த அஜித் உடனடியாக அவருக்கு 5 லட்சம் ரூபாயை கொடுத்து நகையை மீட்டு எடுக்குமாறு கூறியுள்ளார்.

5 லட்சம் கொடுத்தது மட்டுமல்லாமல் அந்த ஐந்து லட்ச ரூபாய்க்கு பத்தாயிரம் ரூபாய் GST-ஐ சேர்த்து செலுத்தியுள்ளார்.

அஜித் 5 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு காசோலை அளித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரசிகனாக இருப்பதில் பெருமை படுவதாக கூறி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.