Ajith Helps to Amma Memorial Opening

தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலமாக ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவியுள்ளார் நடிகர் தல அஜித்.

Ajith Helps to Amma Memorial Opening : தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது வழியில் ஆட்சி செய்து வருகிறார் முதல்வர் பழனிசாமி.

சென்னை மெரினா கடற்கரையில் 80 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அம்மாவின் நினைவிடத்தை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.

அதாவது ஜெயலலிதாவின் சிலை மீது போடப்பட்டிருந்த பச்சை நிறப் போர்வையை தல அஜித் வடிவமைத்த ட்ரோன் மூலம் அகற்றினார் முதல்வர் பழனிசாமி.

அதுமட்டுமல்லாமல் அந்த ட்ரோன் மூலமாக ஜெயலலிதாவின் சிலை மீது மலர் தூவினர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.