சக ரைடர்-க்கு தான் ஓட்டி கொண்டிருந்த வாகனத்தை இலவசமாக கொடுத்த அஜித்

1993-ஆம் ஆண்டு ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ‘தல’ என்ற பட்டத்தை 2003-ல் தீனா படத்தில் பெற்ற நடிகர் அஜித்குமார், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த வாழ்க்கையைப் பெற்றவர், இன்னும் கோலிவுட்டின் மறுக்கமுடியாத சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மிக எளிமையான பிரபலங்களில் அஜித் ஒருவர்,ஆண்டிற்க்கு 4,5 படம் நடிப்பது இல்லை என்றாலும் அவரின் எளிமை தனத்தாலும் ரசிகர்களுக்கு அவர் மீது உள்ள அன்பினாலும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக இருக்கிறார். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கிறார் அதன் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

தற்போது அஜித் பைக்-ல் உலகம் முழுவதும் பயணித்து கொண்டிருக்கிறார் அவ்வப்போதே புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது அதனை தொடர்ந்து தற்போது அவரின் பல லட்சம் மதிப்பிலான BMW பைக்-ஐ சக ரைடருக்கு இலவசமாக கொடுத்ததாக தகவல் ஒன்று வெளிவந்தது. அதை கேட்டு அனைவரும் ஆச்சிர்யத்தில் வியந்து போனார்கள், இது அணைத்து சமூக வலைத்தளத்திலும் தீயாக பரவுகிறது.