வலிமை படத்தைப்பார்த்து வினோத்தை பாராட்டிய கையோடு தல அஜித் அவருக்கு செம பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

Ajith Gift to Vinoth After Watching Valimai : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார்.

பொதுவாக தல அஜித்துக்கு தான் நடிக்கும் படங்களை முன்கூட்டியே பார்க்கும் பழக்கம் இல்லை. டப்பிங் பணிகள் எல்லாம் முடிந்து படம் ரிலீஸ் ஆன பின்னரே அவர் படத்தை பார்ப்பார். ஆனால் வலிமை படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சேசிங் காட்சிகளில் நடித்து இருப்பதால் அவருக்கு ரிலீஸுக்கு முன்னரே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

காரியம் வாகை சூட, காளையார் கோவில் வணங்குதும்.!

இதன் காரணமாக தன்னுடைய வீட்டிலேயே வினோத்தை படத்தைப் போட்டுக் காண்பிக்க சொல்லி பார்த்து ரசித்துள்ளார். படம் வேற லெவல் இன் வந்திருப்பதாக இயக்குனரை பாராட்டியுள்ளார்.

நான் இந்த படத்துல ஒன்னுமே பண்ணல – Actor Prankster Rahul Speech | Bachelor Press Meet

அவரைப் பாராட்டியது மட்டுமல்லாமல் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் பரிசு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு தான். வலிமை படத்தை முடித்து விட்டு வேறு ஒரு இயக்குனர் இயக்கத்தில் நடித்து பின்னர் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கலாம் என அஜித் முடிவு செய்திருந்தார். ஆனால் வலிமை படத்தை பார்த்த பிறகு தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு அடுத்த படத்திலேயே வினோத் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லி உள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.