மீண்டும் உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் தல அஜித்.

Ajith Getup for Thala61 Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை : இன்று பௌர்ணமி- கிரிவலம் செல்வது எப்போது?

இந்த படத்தில் இளமை, முதுமை என இரண்டு வேடத்திலும் தல அஜித் நடிக்கிறார். தல அஜித் யங்காக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்துல அந்த Cute Girl-ஐ பார்க்கமுடியாது – Priya Bhavani Shankar Opens Up..! | Oh Manapenne |HD

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் உடல் எடையை குறைத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவ தொடங்கியுள்ளது. இது புதிய படத்தின் கெட்டப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தல அஜித் அடுத்ததாக மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.