நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல்நல குறைபாட்டால் காலமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் மறைமுகமாக மக்களுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் நடிப்பில் அடுத்ததாக AK 62 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நல குறைபாடு காரணமாக காலமாகி உள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அவர் தற்போது இறைவனடி சேர்ந்ததாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஜித் குமார் அவர்களின் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.