Ajith Fans Poster in Madurai

கொய்யால வலிமை அப்டேட் விடு இல்லைனா பர்ஸ்ட் லுக் விடு என்ற போஸ்டர் மதுரையில் அஜித் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ளது.

Ajith Fans Poster in Madurai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வரும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான அதோடு வேறு எந்தவித அப்டேட்டில் படக்குழு வெளியிடவில்லை. இதனால் மொத்த அஜித் ரசிகர்களும் படக்குழு மீது செம கடுப்பில் இருந்து வருகின்றனர்.

படம் பற்றிய அப்டேட்டை வெளியிடுமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகின்றனர். இப்படியான நிலையில் மதுரையில் உள்ள தல அஜித் ரசிகர்கள் இணைந்து போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில் கொய்யால வலிமை அப்டேட் விடு, இல்லைனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடு என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இதோ அந்த போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.