வலிமை படத்திற்கான கொண்டாட்டங்கள் தமிழகத்தில் பல இடங்களில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

Ajith Fans in Valimai Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட தொடங்கியுள்ளனர். திரையரங்குகளில் பிரம்மாண்ட காட்டுவது வைப்பது போன்ற விஷயங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது‌.

இன்னொரு பக்கம் வலிமை படக்குழுவும் பிரமோஷனுக்காக இறங்கி வேலை செய்து வருகிறது. திரையரங்குகளில் படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி உலகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகி இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் திரையரங்கம் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ள கட்டவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.