அப்டேட்ஸ் எதுவும் வரல.. ஆனாலும் தல அஜித் ரசிகர்கள் டிரெண்ட்டிங்கில் தெறிக்க விட்டு வருகின்றனர்.
Ajith Fans Celebration With MissionThala50 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தின் அப்டேட் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு வழியாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்த நாள் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மே 1 நெருங்கி கொண்டே வருவதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் #MissionThala50 என்ற டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.