Ajith Fans Blast Boney Kapoor
Ajith Fans Blast Boney Kapoor

வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரை அஜித் ரசிகர்கள் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

Ajith Fans Blast Boney Kapoor : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்தப் படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் இப்படத்தின் அப்டேட் ஒன்றாவது வெளியாகாதா என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படக்குழு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.

ஏதோ ஒரு தெரு நாய் கொலைக்குதாமே.. மீராவை வச்சி செய்த மாஸ்டர் பட நடிகர் – வைரலாகும் பதிவு.!!

இந்த நிலையில் போனி கபூர் அவருடைய நண்பரின் படத்தின் டிரைலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் அடுத்தவங்க பட வெளியிட்டு அத விட்டுட்டு உங்க சொந்த படத்தோட ட்ரைலர் இல்லனா டீசரை ரிலீஸ் பண்ணுங்க என கூறி வருகின்றனர்.

ஒருசிலர் ஆவேசமாக வலிமை அப்டேட் எங்கடா என கேள்வி கேட்டு வருகின்றனர்.