இப்படி சொல்லிக்க உனக்கு கூச்சமா இல்லையா என குக் வித் கோமாளி அஸ்வினை அஜித் ரசிகர்கள் வெளுத்து வாங்கி உள்ளனர்.

Ajith Fans Blast Ashwin : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். பல்வேறு ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள இவர் வெள்ளித்திரையில் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இப்படி சொல்லிக்க கூச்சமா இல்ல.. அஸ்வினை வெளுத்து வாங்கிய அஜித் ரசிகர்கள் - காரணம் இதுதான்

இந்த படத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அஸ்வின் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அவருடைய தலைக்கணம் எனவும் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இவர் அடுத்ததாக பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள செம்பி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரை வெளியிட்ட அஸ்வின் தன்னுடைய பெயரை ஏகே என குறிப்பிட்டு கொண்டார்.

இப்படி சொல்லிக்க கூச்சமா இல்ல.. அஸ்வினை வெளுத்து வாங்கிய அஜித் ரசிகர்கள் - காரணம் இதுதான்

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் இப்படி சொல்லிக்க உனக்கு கூச்சமா இல்லையா? ஏகே என்றால் அது அஜித் மட்டும் தான் என அவரை விமர்சனம் செய்துள்ளனர். அஸ்வின் பப்ளிசிட்டிக்காக இப்படி ஏகே என அஜித்தின் பெயரை பயன்படுத்தியதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.