Ajith Fans Birthday Celebration
Ajith Fans Birthday Celebration

அஜித் சொல்லியும் தல ரசிகர்கள் கேட்காமல் பிறந்தநாள் கொண்டாடியதால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith Fans Birthday Celebration : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் படங்களில் நடிப்பதோடு சரி இவரை பொது நிகழ்ச்சிகளிலோ சமூக வலைதளங்களிலும் பார்க்க முடியாது.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மே ஒன்றாம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு கூறியிருந்தார்.

விஜய் டிவி கோபிநாத் மகளா இது?? அஜித்தின் பிறந்த நாளுக்காக என்ன செய்திருக்கிறார் பாருங்க.!

ஆனால் ரசிகர்கள் அதனை கேட்காமல் பல இடங்களில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அதிலும் குறிப்பாக கும்பகோணத்தை அடுத்துள்ள தியாக சமுத்திரம் என்ற கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி தோரணம், பட்டாசு, இரண்டாயிரத்துக்கு கேக் என பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர்.

இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த ஊரில் கறி விருந்து செய்து கொண்டாடியதால் இளைஞர்களை போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.