Ajith Fans Alaparai in Chepak Stadium

சேப்பாக்கம் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் முழக்கமிட்டு உள்ளனர்.

Ajith Fans Alaparai in Chepak Stadium : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்திலும் போனி கபூர் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியும், படக்குழு எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை.

இதனால் தல அஜித் ரசிகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் தமிழ் கடவுள் முருகன் வரை அனைவரிடமும் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

தற்போது இந்தியா இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்ற தல ரசிகர்கள் we want Valimai update என்று கேட்டு முழக்கமிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.