ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இது தல போட்ட விதை என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ajith Fans About JaiBhim Success : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் ஜெய் பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வெள்ளி, செவ்வாய் ஜோதி வழிபாடு ஏன்?

ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹீரோவுக்கு படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் சூர்யா துணிந்து நடித்திருந்தது பலரையும் பாராட்ட வைத்தது. ஆனால் இதற்கெல்லாம் விதை போட்டது எங்களுடைய தல அஜித் தான் என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தனக்கு ஹீரோயிசம் இருக்க வேண்டும் என பார்க்காமல் தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் துணிந்து வழக்கறிஞராக நடித்திருந்ததை சுட்டிக்காட்டி அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். அதாவது ஹீரோயிசம் காட்டாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வெற்றி பெற்றதால் தான் மற்ற நடிகர்கள் இதுபோன்ற கதாபாத்திரங்களில் துணிந்து நடிக்கத் தொடங்கி உள்ளனர் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சூர்யாவிற்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Chennai Rains : மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய Vishal – வைரலாகும் வீடியோ | HD