
Ajith Fan Video : தெறிக்க விடலாமா? என வயதான ரசிகை ஒருவர் அஜித் பட வசனத்தை பேசி அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அரங்கத்தை அதிர வைத்துள்ளார் அஜித் ரசிகை ஒருவர்.
எங்க குடும்பமே அஜித் ரசிகர்கள் தான். அஜித் படம் ரிலீஸானாலே தியேட்டருக்கு பி[போய் குத்தாட்டம் போடுவோம் என கூறியுள்ளார்.
மேலும் அஜித் வசனத்தையெல்லாம் பேசுவார் என அந்த பாட்டியின் பேத்தி கூற தெறிக்க விடலாமா என கூறி அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.
அந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Thala Fans family ❤
| Video Courtesy : ZeeTamil pic.twitter.com/cYpiWddoq8
— Thala Videos (@ThalaVideos) January 7, 2019