Ajith Family
Ajith Family

Ajith Family – ரசிகர்களுக்கு அடுத்தபடியாக அஜித்தின் வாழ்வில் அவருக்கு பக்க பலமாக இருக்கும் இன்னொரு நபர் அவருடைய காதல் மனைவி ஷாலினி. அமர்க்களம் சமயத்தில் சக நடிகையான ஷாலினியை காதலித்து மணந்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இதில் ஆத்விக் பிறந்த போது ’குட்டி தல’ எனும் ஹேஷ்டாக்கை உலகளவில் டிரெண்ட் செய்து அவருடைய ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

ஷூட்டிங் தவிர்த்து குடும்பத்துடன் நேரம் செலுத்துவே அதிகம் விரும்புவார் அஜித்.

அதேபோல் அஜித்தின் பெர்சனல் பக்கங்களை தெரிந்துகொள்ள அவருடைய ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு.

அந்தவகையில் அஜித் குடும்பத்தினரின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் அஜித்தின் மகள் நன்கு வளர்ந்திருப்பதும் மகன் ஆத்விக்கும் வேகமாக வளர்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

Ajith Family
Ajith Family
Ajith Family
Ajith Family