வலிமை ரிலீஸ் குறித்து தல அஜித் எடுத்த முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Ajith Decision on Valimai Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

477 சிறுவர்-சிறுமியர் மீட்பு : மத்திய ரயில்வே தகவல்

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தல அஜித் ரஷ்யா சென்றுள்ளார்.

வலிமை ரிலீஸில் அஜித் எடுத்த முடிவு.. எதிர்பார்ப்பு எல்லாம் வீணா போச்சு - ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்

மேலும் இந்த படத்தை படக்குழு தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தல அஜித் வலிமை படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டாம் என கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

தீபாவளிக்கு முன்னதாகவோ அல்லது தீபாவளியை கழித்து இந்த படத்தை வெளியிடலாம் என அஜித் கூறியுள்ளார் என பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வலிமை படம் தீபாவளி முடிந்த பின்னரே வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தகவல்கள் கசிந்துள்ளன.

புதிய சாதனை படைத்த Suriya-வின் Soorarai Pottru! – குவிந்த விருதுகள்

இந்த வருட தீபாவளி வலிமை தீபாவளியாக இருக்கும் என எதிர்பார்த்த அஜித் ரசிகர்கள் இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.