அடுத்த சம்மருக்கு கூட வலிமை திரைப்படம் வெளிவர வாய்ப்பில்லை என கோலிவுட் வட்டாரங்களில் பேசத் தொடங்கியுள்ளனர்.

Ajith Decision on Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் வலிமை.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாக இருந்தது.

மாஸ்டருடன் மோத போகும் சூர்யாவின் சூரரை போற்று படத்தை பார்த்த விஜய்.. எல்லாம் காரணமா தான் பாஸ் – ஏன் தெரியுமா?

ஆனால் பரவி வரும் கொரானா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் அஜித் நம்முடைய படக்குழுவினர் யாரும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது ஆகையால் தற்போதைக்கு படம் சார்ந்த எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள வேண்டாம் என கூறிவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பி பழையபடி அனைத்து பணிகளும் தொடங்கிய பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என அவர் போனி கபூருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் அடுத்த சம்மருக்கு கூட வலிமை திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.

அவன், இவன் என பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசி மன்னிப்பு கேட்ட குஷ்பு – நடந்தது என்ன?

அதுமட்டுமல்லாமல் அஜித் வலிமை திரைப்படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படத்தில் நடிக்க மாட்டேன் எனவும் வாக்கு கொடுத்துள்ளார்.

வலிமை திரைப்படம் அடுத்த வருடமும் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.