Ajith Decision on His Salary
Ajith Decision on His Salary

வலிமை பணத்தில் சம்பள விவகாரத்தில் அஜித் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Ajith Decision on His Salary : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு தடைகளைத் தாண்டி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ரஜினியின் தான் நடித்து வரும் அண்ணாத்த படத்திற்காக தன்னுடைய சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை விட்டுக் கொடுத்ததாக தகவல்கள் கசிந்தன.

விஜய்சேதுபதி என்னோட மாமா..! – வித்தியாசமாக சூரி போட்ட டுவீட்

இந்த நிலையில் அஜித் வித்தியாசமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதுகுறித்து போனில் அவருக்கும் இமெயில் ஒன்றை அனுப்பி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது தற்போதைக்கு என்னுடைய சம்பளத்தை பற்றி பேச வேண்டாம். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் ரிலீசாகும் சமயத்தில் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றார் போல சம்பளத்தை தருமாறு கூறியுள்ளார்.

இதன் காரணமாக அஜித் தற்போது சம்பளத்தை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அஜித்தின் இந்த முடிவை பார்த்த கோலிவுட் வாசிகள் தெளிவான மனுஷன் என கூறி வருகின்றனர். அதேபோல் மற்ற நடிகர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்க உள்ளார் தளபதி 65 படத்திற்காக அவர் சம்பளத்தை குறைக்க தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய நிறுவனம் என்பதால் அவர் சம்பளத்தை குறைக்க தயக்கம் காட்டி இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.