அஜித் 62 படத்திற்காக அஜித்குமார் எடுத்துள்ள முடிவு விக்னேஷ் சிவனை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது அஜித் 61 என்ற திரைப்படம் உருவாக்கி வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

விக்னேஷ் சிவன் படத்திற்காக அஜித் எடுத்த முடிவு.. உச்சகட்ட உற்சாகத்தில் இயக்குனர் - அப்படி என்ன விஷயம்?

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்க உள்ள 62 ஆவது படத்தில் நடிக்கிறார்.

முதலில் இந்த படத்தின் கதையை கேட்ட அஜித் 50% உங்களது கதையாக இருக்கட்டும் 50 சதவீதம் எனக்கான கதையாக இருக்கட்டும் என அஜித் கட்டளையிட்டிருந்தார். மேலும் படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இடம் பெறக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது அந்த கடிவாளத்தை நீக்கியுள்ளார். ஆமாம் படம் உங்களுடைய படமாகவே இருக்கட்டும் ஆனால் எக்காரணத்தை கொண்டும் அரசியல் காட்சிகள் மட்டும் வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் முழு மகிழ்ச்சியோடு திரைக்கதை அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவன் படத்திற்காக அஜித் எடுத்த முடிவு.. உச்சகட்ட உற்சாகத்தில் இயக்குனர் - அப்படி என்ன விஷயம்?

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.