கோட் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அஜித்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ,கல்பாத்தி எஸ்.சுரேஷ் கல்பாத்தி எஸ்.அகோரம் கல்பாத்தி எஸ்.கணேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, யோகி பாபு ,பார்வதி நாயர், விடிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படம் என்று வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது மட்டுமில்லாமல் இந்த படத்திற்கான முதல் வாழ்க்கை அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
அதற்கு வெங்கட் பிரபு பதிலளித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில், நன்றி தல அஜித், விஜய் அண்ணாவுக்கு எனக்கு மற்றும் கோட் படக் குழுவினருக்கு முதல் வாழ்த்து தெரிவித்ததற்கு என்று கூறியுள்ளார். மேலும் நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு வெளியாகிய இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.