எதிர்பாராத நேரத்தில் துணிவு படக்குழு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் வரும் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தளபதி விஜயின் வாரிசு படத்துடன் நேருக்கு நேராக மோத உள்ள இந்த படத்தில் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் உட்பட பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது அஜித்குமார் இந்த படத்திற்கான டப்பிங் நிறைவு செய்ததாக பட குழு அறிவித்துள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.