Ajith Completes Dubbing for Valimai

வலிமை படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Ajith Completes Dubbing for Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் தல அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க வில்லனாக கார்த்திகேயா நடித்து வருகிறார். இந்த படத்தில் அப்டேட்களுக்காக ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக காத்துக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் தான் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாள் விருந்தாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் சமீப காலமாக தொடர்ந்து தல அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வலிமை படத்திற்கான டப்பிங் வேலையை தல அஜித் முடித்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.