Ajith Comments on Valimai Motion Poster

வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்து வியந்து தல அஜித் பாராட்டியுள்ளார்.

Ajith Comments on Valimai Motion Poster: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை.

எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் டப்பிங் பணிகளும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

வேற லெவல் சார்.. வலிமை மோஷன் போஸ்டரை பார்த்து வியந்த தல அஜித் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!!

அஜித் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் அப்டேட்டாக கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில்தான் தயாரிப்பாளர் போனி கபூர் விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் தயார் நிலையில் இருப்பதாகவும் இதனை பார்த்த தல அஜித் வேற லெவல் என புகழ்ந்து தள்ளியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் நான் சொல்லும் வரை இதன் மோஷன் போஸ்டரை வெளியிடக்கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.