Ajith Clarify About Next Movie
Ajith Clarify About Next Movie

ஐயப்பனும் கோசியும் பட இயக்குனருடன் அஜித் இணைய ஆசை பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

Ajith Clarify About Next Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஐயப்பன் கோஷியும் படத்தை பார்த்து அஜித் ரசித்ததாகவும் அவருடன் இணைய ஆசைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து தற்போது இது குறித்து அஜித் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் கோஷியும் பட இயக்குனருடன் இணைய ஆசைப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

தலனா யாருனு தெரிஞ்சிட்டு வந்து பேசு.. பிரபல நடிகையிடம் சண்டையிட்ட அஜித் ரசிகர்கள் – பரபரப்பை ஏற்படுத்திய பதிவு!

இது பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள். மேலும் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

ஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் சச்சி கடந்த ஜூன் 18-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.