பாடகர் திருமூர்த்தி பாடி அசதி இருக்கும் அஜித்தின் சில்லாசில்லா பாடல் வீடியோ வைரல்.

கோலிவுட் திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் குமார் தற்போது எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

திருமூர்த்தி குரலில்… இணையத்தை தெறிக்க விடும் சில்லா சில்லா பாடல்.!!

இந்நிலையில் இப்பாடலை பார்வை அற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தனது அழகான தனித்துவமான குரலால் சினிமாவில் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து வரும் பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி அவர்கள் தாளம் போட்டு அவரது குரலில் பாடி அசத்தியுள்ளார். அந்த சூப்பரான வீடியோ தற்போது இணையத்தில் தல ரசிகர்களால் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.