Ajith Calendar for 2022

2022-ம் ஆண்டிற்கான அஜித் ரசிகர்கள் உருவாக்கிய கேலண்டரை வெளியிட்டுள்ளனர் பிக் பாஸ் 5 சீசன் பிரபலங்கள்.

Ajith Calendar for 2022 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி : பதக்கம் வென்றார் புதுக்கோட்டை வீராங்கனை..

இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க 2022ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் அஜித்தின் புகைப்படத்தை வைத்து காலண்டரை உருவாக்கி உள்ளனர்.

எனக்கு பயம் கிடையாது Interview With Mugen Rao & Prankster Rahul | Velan Movie | Soori | HD

இந்த காலண்டரை பிக் பாஸ் 5 பிரபலங்களான இமான் அண்ணாச்சி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகிறது.