Ajith Birthday Celebration Poster

தல அஜித்தை எம்ஜிஆர் ஆக சித்தரித்து பொன்மனச்செம்மல் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ajith Birthday Celebration Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நாளை தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் மதுரையில் தல அஜித்தை எம்ஜிஆர் ஆக சித்தரித்து பொன்மனச் செம்மலை என கூறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போஸ்டரின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது.