பிரம்மாண்ட படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் அஜித் என தகவல் என்று பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு.

இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இது படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அஜித்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கம் ஆர்சி 15 படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராம்சரண் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் எஸ்பிஐ சூர்யா கியாரே அத்வானி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் திட்டத்திற்கு ஓகே சொல்வாரா அஜித் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக எழுந்துள்ளது.