AJith and Dhnaush

AJith and Dhnaush : ஒரே தயாரிப்பு நிறுவனத்துக்கு முன்னணி நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து ஒப்பந்தமாகுறதுதான் இப்போ தமிழ்ல டிரெண்டாகிட்டு வருது.

ஸ்க்ரீன் சீன் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து மூனு படங்கள் நடிச்சி தராத ஏற்கனவே ஒப்பந்தம் செஞ்சிருந்த நிலையில இப்போ விஷாலும் அதே நிறுவனத்துக்கு ரெண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியிருக்காரு.

இவங்க போக நடிகர் விஷ்ணு விஷாலும் பிரபல வயாகாம் 18 நிறுவனத்துக்கு அடுத்தடுத்து ரெண்டு படங்கள் நடிச்சி தர ஒப்பந்தமாகியிருக்காரு.

இந்த பட்டியல்ல இப்போ புதுசா இணைஞ்சிருக்காரு தனுஷ். இவரோட நடிப்பில விஐபி 2 படத்த தயாரிச்ச கலைப்புலி எஸ். தானுவோட வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கே அடுத்தடுத்து மூனு படங்கள்ல நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியிருக்காரு.

இதில ஒரு படத்த வெற்றிமாறனும் இன்னொரு படத்த மாரி செல்வராஜும் இயக்க இருக்காங்க.

இதுபோக தனுஷ் இயக்கத்தில பாதியில நின்ன மெகா பட்ஜெட் படத்தையும் தாணு தயாரிக்க முன்வந்திருக்கிறதா சொல்லப்படுது.

இதற்கு முன்பே சத்யஜோதி நிறுவனத்துக்கு இரண்டு படங்கள் நடித்துதர தனுஷ் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இளம் நடிகர்கள் பலரும் இந்த டிரெண்டை ஃபாலோ செய்தாலும் இதற்கான விதையை விதைத்தவர் அஜித் தான்.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை தமிழுக்கு அழைத்து வரும் அஜித், அடுத்தடுத்து அவருக்கு இரண்டு படங்களுக்கான கால்ஷீட்டை வழங்கியிருந்தார்.

அஜித்தே இப்படி செய்ததால்தான் தற்போது இளம் நடிகர்கள் பலரும் அதை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

AJith and Dhnaush :
AJith and Dhnaush :
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.